undefined

12,000 அடி உயரத்தில் பயங்கரவாதிகளின் பனிக்கோட்டை... பதுங்கு குழிகளை அழித்த ராணுவம்!

 

குளிர்காலத்தை மலை உச்சியிலேயே கழிப்பதற்காகத் திட்டமிட்டு, பல மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களுடன் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளின் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

12,000 அடி உயரத்தில் மிகவும் வலிமையான முறையில் இந்தப் பதுங்கு குழி கட்டப்பட்டுள்ளது. இதில் பல நுழைவுப் புள்ளிகள் இருந்தன. பல மாதங்களுக்குத் தேவையான 20 கிலோ பாஸ்மதி அரிசி, 50 பாக்கெட் மேகி, உருளைக்கிழங்கு, தக்காளி போன்ற காய்கறிகள், 15 வகை மசாலாப் பொருட்கள், சமையல் எரிவாயு மற்றும் குளிர்காய உலர்ந்த மரக்கட்டைகள் ஆகியவை அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளன.

இவ்வளவு உயரத்தில், இவ்வளவு வசதிகளுடன் பதுங்கு குழி அமைக்க உள்ளூர்வாசிகள் சிலரின்  உதவி நிச்சயம் இருந்திருக்க வேண்டும் எனப் பாதுகாப்பு நிறுவனங்கள் கருதுகின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்புப் படையினர் இப்பகுதியை நெருங்கியபோது, உள்ளே மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரெனக் கையெறி குண்டுகளை வீசித் தாக்கினர். இந்தத் தாக்குதலில் 7 வீரர்கள் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த ஹவில்தார் கஜேந்திர சிங் சிகிச்சை பலனின்றி வீரமரணமடைந்தார்.

தாக்குதலைத் தொடர்ந்து அடர்ந்த பனிமூட்டத்தைப் பயன்படுத்திப் பயங்கரவாதிகள் தப்பியோடினர். அவர்களைப் பிடிக்க 'டிராஷி-1' (Trashi-1) என்ற பெயரில் மிகப்பெரிய தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!