undefined

 எல்லை வழியாக ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் முயற்சி முறியடிப்பு!  

 

ஜம்மு–காஷ்மீரின் ரஜெளரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளின் முயற்சி ராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. புதன்கிழமை அதிகாலை துா்கண்டி எல்லைப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் சிலர் நுழைய முயன்றதை ராணுவ வீரர்கள் கண்டறிந்தனர். உடனடியாக அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாலை சுமார் 4.15 மணிக்கு  இந்தச் சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. உளவு அமைப்புகளின் தகவல்கள் மற்றும் தொடர்ந்த கண்காணிப்பு மூலம் எல்லைக் கட்டுப்பாடு பகுதியை ஒட்டிய பிம்பர் காலி பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் கண்டறியப்பட்டதாக ராணுவம் தெரிவித்தது. விழிப்புணர்வுடன் செயல்பட்ட வீரர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்ததால் ஊடுருவல் முயற்சி தடுக்கப்பட்டது.

இந்த துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் உயிரிழந்தார்களா என்பது குறித்து ராணுவ அதிகாரிகள் உறுதியாக தகவல் வெளியிடவில்லை. இதற்கு முன் கடந்த பிப்ரவரி 19 மற்றும் 20 தேதிகளில் ரஜெளரியின் சுந்தர்பானி பகுதியில் எல்லை தாண்ட முயன்ற பயங்கரவாதிகளின் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. அப்போது அவர்கள் கொண்டு வந்த ஆயுதங்களை ராணுவத்தினர் கைப்பற்றியிருந்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!