undefined

 இன்றும், நாளையும் 20 மொழிகளில் சிடெட் தேர்வு … தேர்வர்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு!  

 
 

ஆசிரியர் பணியில் சேர மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடெட்) தேர்ச்சி கட்டாயமாகும். இரண்டு தாள்கள் கொண்ட இந்த தேர்வை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் ஆண்டுக்கு இருமுறை நடத்தி வருகிறது. இடைநிலை ஆசிரியர் பணிக்கு முதல் தாளும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு இரண்டாம் தாளும் நடைபெறுகிறது. இந்த தேர்வில் ஒருமுறை தேர்ச்சி பெற்றால் அந்த சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும்.

இந்த ஆண்டுக்கான சிடெட் தேர்வு பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தேர்வு மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 20 மொழிகளில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் கடந்த 5-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு விவரங்களை https://ctet.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். தேர்வு மையத்திற்கு காலை அமர்வுக்கு 9.30 மணிக்கும், பிற்பகல் அமர்வுக்கு 2.30 மணிக்கும் முன்பாக தேர்வர்கள் வர வேண்டும். ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை கடைப்பிடிக்க வேண்டும். முறைகேடுகளில் ஈடுபட்டால் தேர்ச்சி ரத்து செய்யப்படுவதுடன், எதிர்கால தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்று சிபிஎஸ்இ எச்சரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!