கம்போடியா மீது தாய்லாந்து வான்வழி தாக்குதல் ... மீண்டும் போர் பதற்றம்!
தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்டகாலமாக எல்லை தகராறு நீடித்து வருகிறது. இரு நாடுகளின் எல்லையில் உள்ள தா முயென் தாம் கோவிலை தங்களுக்கே உரியது என இரு நாடுகளும் உரிமை கோருகின்றன. கடந்த மே மாதம் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கம்போடியா ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 24 முதல் 28 வரை இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடந்தது. இந்த மோதலில் 48 பேர் உயிரிழந்தனர். எல்லைப் பகுதிகளில் வசித்த சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பு காரணமாக வெளியேற்றப்பட்டனர். போர் முடிந்த போதும், எல்லை பகுதியில் கண்ணிவெடிகள் பதிக்கப்பட்டதால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் தொடர்ந்தே வந்தது.
இந்த நிலையில், கம்போடியா முதலில் எல்லையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், அதற்கு பதிலடியாக வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தாய்லாந்து இன்று தெரிவித்துள்ளது. கம்போடியா தாக்குதலில் தாய்லாந்து பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால், தாய்லாந்தின் தாக்குதலில் கம்போடியாவுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேத விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!