தை அமாவாசை... ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்… பயணிகளுக்கு கூடுதல் வசதி!
பொங்கல் தொடர் விடுமுறை மற்றும் தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம்–தாம்பரம் மற்றும் தாம்பரம்–ராமேஸ்வரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்ததை தொடர்ந்து கூடுதல் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
06105/06106 என்ற எண் கொண்ட இந்த சிறப்பு ரயில்களில், 13 மற்றும் 14-ந் தேதிகளில் கூடுதலாக 2 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இதனால் டிக்கெட் பற்றாக்குறை சற்று குறையும் என ரயில்வே தரப்பு தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட பெட்டி அமைப்பில் 3 ஏசி மூன்றடுக்கு பெட்டிகள், 6 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 6 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இடம் பெறுகின்றன. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதியான 1 இரண்டாம் வகுப்பு பெட்டி மற்றும் 1 லக்கேஜ் பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார். அதே போன்று தை அமாவாசைக்கு முன் தினமான ஜனவரி 17ம் தேதியும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!