தாய்லாந்து வில்வித்தை போட்டி... இந்தியாவிற்கு 2  வெண்கலப் பதக்கங்கள்!

 

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் தற்போது ஆசிய கோப்பை மற்றும் உலகத் தரம் வாய்ந்த வில்வித்தை போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் ஆண்கள் அணிகள் பிரிவில் பங்கேற்ற ரஜத் சவுகான் மற்றும் ரிஷப் யாதவ் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய அணி அரையிறுதி ஆட்டத்தில் வியட்நாமிடம் ஒரு புள்ளி வித்தியாசத்தில் நூலிழையில் வெற்றியை நழுவவிட்டது. இதனால் இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை இழந்த இந்திய வீரர்கள் ரசிகர்களுக்குச் சற்று ஏமாற்றம் அளித்தாலும் அடுத்ததாக நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் பூடான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ஆண்கள் அணி வெண்கலப் பதக்கத்தை வென்ற அதே வேளையில் பெண்கள் அணிகள் பிரிவிலும் இந்திய வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரிகர்வ் பெண்கள் பிரிவில் நடைபெற்ற வெண்கலப் பதக்கத்திற்கான முக்கிய ஆட்டத்தில் ரூமா பிஸ்வாஸ் மற்றும் கீர்த்தி உள்ளிட்ட இந்திய அணி மலேசிய அணியை எதிர்கொண்டது. ஆரம்பம் முதலே மலேசிய வீராங்கனைகளுக்குக் கடும் சவால் அளித்த இந்திய அணி ஐந்துக்கு ஒன்று என்ற கணக்கில் அபார வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தைத் தன்வசப்படுத்தியது.

சர்வதேச அளவில் நடைபெறும் இந்த வில்வித்தை போட்டியில் இந்தியா தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வெல்லும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டு பிரிவுகளிலும் வெண்கலத்தோடு திருப்தி அடைய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கடும் போட்டிக்கு இடையே மற்ற நாட்டு வீரர்களை வீழ்த்திப் பதக்கப் பட்டியலில் இந்தியா இடம்பிடித்திருப்பது விளையாட்டு ஆர்வலர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. வரும் நாட்களில் நடைபெறவுள்ள மற்றப் போட்டிகளில் இந்திய வீரர்கள் மேலும் பல பதக்கங்களைக் குவிப்பார்கள் எனப் பயிற்சியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!