நெகிழ்ச்சி... 26 ஆண்டுகளாக இஸ்லாமியர் டன் கணக்கில் வள்ளலார் ஜோதி தரிசனத்திற்கு உணவுப் பொருட்கள்!
கடலூரைச் சேர்ந்த எஸ்.கே.பக்கீரான், வடலூரில் நடைபெறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழாவுக்காக கடந்த 25 ஆண்டுகளாக அன்னதானப் பொருட்களை தொடர்ந்து அனுப்பி வருகிறார். நிகழாண்டில் 26-ஆவது ஆண்டாக, 20 டன் காய்கறிகள், 7,000 தண்ணீர் பாட்டில்கள், 100 மூட்டை அரிசி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, சேமியா உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் இரண்டு லாரிகளில் வடலூர் வள்ளலார் தர்மசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு இரட்டிப்பு அளவில் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
கடலூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வணிகர் சங்க தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். எஸ்.கே.பக்கீரான், கடலூர் மாவட்ட சிறுபான்மை மக்கள் நலக்குழு தலைவர், வணிகர் சங்க இணைச் செயலாளர், மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் உள்ளிட்ட பல பொறுப்புகளில் இருந்து சமூக பணியாற்றி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மதம், ஜாதி வேறுபாடுகளைத் தாண்டி மனிதநேயத்தை போதித்த வள்ளலார் மீது சிறுவயதில் இருந்தே தனக்கு ஈடுபாடு இருப்பதாக தெரிவித்தார். பசியை போக்கும் சேவை தான் உயர்ந்த சேவை என்ற எண்ணத்துடன், மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் இந்த பணியை செய்து வருவதாக கூறினார். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என எல்லோரும் சகோதரத்துவமாக வாழ வேண்டும் என்பதற்காகவே இந்த சேவையை தொடர்வதாகவும் அவர் கூறினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!