தல அஜித்துக்கு ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது... ஷாலினி நெகிழ்ச்சி பதிவு!
சினிமாவைத் தாண்டியும் தனக்குப் பிடித்த கார் பந்தய உலகில் முழு ஆற்றலுடன் பாய்ந்து வரும் நடிகர் அஜித் குமார், இந்தாண்டு இத்தாலியில் நடைபெற்ற விழாவில் ஜென்டில்மேன் ஓட்டுநர் விருதை பெற்றுள்ளார். வெனிஸ் நகரில் பிலிப் சாரியட் மோட்டார்ஸ்போர்ட் சார்பில் வழங்கப்பட்ட இந்த விருது, அஜித்தின் ரேசிங் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய அங்கீகாரமாக அமைந்துள்ளது.
இந்த பெருமையான தருணத்தின் புகைப்படங்களை அவரது மனைவி ஷாலினி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து நெகிழ்ச்சியுடன், “என் கணவர் இந்தாண்டின் ஜென்டில்மேன் ஓட்டுநர் விருதை வென்ற நிலையில், அவரின் பக்கத்தில் நிற்கும் பேரின்பம் எனக்கு கிடைத்துள்ளது” என்று குறிப்பிட்டார். சமீபத்தில் நாட்டின் உயரிய civilian விருதான பத்மபூஷன் வழங்கப்பட்டதையும் தொடர்ந்து, ஐரோப்பிய ரேசிங்கிலும் அஜித்தின் அணி சாதனை படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக வெற்றி, விருதுகள் என ரசிகர்களை பெருமைப்படுத்தி வரும் அஜித், தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘ஏகே 64’ படத்துக்கான தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த புதிய அங்கீகாரத்தால் ‘தல’ ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்தில் மூழ்கியுள்ளனர்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!