158 வகை உணவுகளுடன் மாப்பிள்ளைக்கு 'தல பொங்கல்' விருந்து! வைரலாகும் வீடியோ!
ஆந்திரப் பிரதேசத்தில் சங்கராந்தி பண்டிகையின் போது மருமகனை வீட்டிற்கு அழைத்துச் சிறப்பு விருந்து அளிப்பது ஒரு முக்கிய மரபாகும். அந்த வகையில், குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் தனது புதிய மருமகனைத் திணறடிக்கும் வகையில் விருந்து அளித்து அசத்தியுள்ளது.
ராஜமுந்திரி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதத்தாவுக்கும், குண்டூரைச் சேர்ந்த மௌனிகாவுக்கும் அண்மையில் திருமணம் முடிந்தது. இவர்கள் இருவரும் தங்களது முதல் பொங்கல் பண்டிகையைக் கொண்டாட மௌனிகாவின் தாய் வீட்டிற்கு வந்துள்ளனர். மௌனிகாவின் தந்தை முரளிகிருஷ்ணா மற்றும் அவரது குடும்பத்தினர், தங்களது மருமகனுக்கு இந்த நாளை மறக்க முடியாத ஒன்றாக மாற்ற விரும்பினர். இதற்காகச் சுமார் 158 வகையான உணவு வகைகளைத் தயார் செய்து மலைக்க வைத்துள்ளனர்.
சைவம் மற்றும் அசைவம் என இரண்டு பிரிவுகளிலும் உணவுகள் தயார் செய்யப்பட்டிருந்தன. ஆந்திராவின் பாரம்பரிய இனிப்பு வகைகள், காரசாரமான உணவுகள், ஊறுகாய்கள் மற்றும் பழங்காலத் தின்பண்டங்கள் என இலை கொள்ளாத அளவிற்கு உணவுகள் பரிமாறப்பட்டன. நீண்ட மேஜையில் வரிசையாக வாழை இலைகள் விரிக்கப்பட்டு, 158 கிண்ணங்களில் உணவுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியது.
இந்த விருந்தின் வீடியோவை அக்குடும்பத்தினர் இணையத்தில் பகிர, அது தற்போது "மருமகன்களின் சொர்க்கம் ஆந்திரா" என்ற வாசகத்துடன் வைரலாகி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!