2.5 கிலோ கஞ்சா எண்ணெய் கடத்தல் - தஞ்சாவூர் பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை!

 

கேரள மாநிலம் பாலக்காட்டில் கஞ்சா எண்ணெய் கடத்திய வழக்கில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 29 வயது பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் 10-ம் தேதி, பாலக்காடு ரயில் நிலையப் பகுதியில் கலால்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த பெண் ஒருவரைப் பிடித்துச் சோதனையிட்டபோது, அவரிடம் இருந்த பையில் 2.5 கிலோ கஞ்சா எண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் தமிழ்நாடு, தஞ்சாவூரைச் சேர்ந்த சிந்துஜா (29) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அவரைக் கைது செய்து கஞ்சா எண்ணெய்யைப் பறிமுதல் செய்தனர்.

இந்த வழக்கு பாலக்காடு 2-வது கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி விசாரணையின் முடிவில், நீதிபதி டி. சுதீர் டேவிட் தீர்ப்பளித்தார். குற்றஞ்சாட்டப்பட்ட சிந்துஜாவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கின் விசாரணையின் போது, சிந்துஜா ஏற்கனவே ஜாமீனில் வெளியே வந்தபோது நிபந்தனைகளை மீறி மீண்டும் கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இது தொடர்பாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் அவர் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் நீதிமன்றங்கள் காட்டி வரும் இத்தகைய கடுமையான அணுகுமுறை கடத்தல்காரர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!