undefined

கொள்கைகள் கடந்து தாங்கள் காட்டும் அன்பிற்கு நன்றி... தவெக தலைவர் விஜய்க்கு தமிழிசை சௌந்தரராஜன் உருக்கம்!
 

 
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமாக காலமானார். இவரது மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலின் உட்பட பிரபல அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு தமிழிசை சவுந்தரராஜன் நன்றி தெரிவித்துள்ளார். 


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், மரியாதைக்குரிய தமிழக வெற்றி கழகத்தின் தலைவர்.. தம்பி விஜய் அவர்களுக்கு.. தாங்கள் பதிவு செய்திருக்கின்ற இரங்கல் செய்தி. எங்களுக்கு மன  ஆறுதலை தருவதோடு.. 

என் தந்தையின் வாழ்க்கைக்கு பெருமை சேர்க்கும் அளவிற்கு கருத்துக்களை பதிவிட்டு இருக்கிறீர்கள்  இரங்கல் செய்தி சொன்னதோடு தங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் சகோதரர் ஆனந்த் அவர்களை நேரில் அனுப்பி... எங்களோடு தங்கள் துக்கத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி... கட்சி, கொள்கைகள் கடந்து தாங்கள் காட்டும் அன்பிற்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?