undefined

அந்த மனசு தான் சார் கடவுள்... தொலைந்து போன 1.5 சவரன்  தங்கச்செயினை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர்!  

 


 
தமிழகத்தில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு புறநோயாளியாக சிகிச்சை பெற வந்த பெண் ஒருவர்  தனது ஒன்றரை பவுன் தங்க செயினை தொலைத்துவிட்டதாக தெரிகிறது.  தற்போது, தங்கம் விற்கும் விலையில் செயினை இழந்த அவர் மருத்துவமனை முழுவதும் தேடிப்பார்த்தும் தொலைந்து போன செயின் கிடைக்கவில்லை. 

இவ்வளவு நோயாளிகள் வந்து செல்லும் இடத்தில் எப்படி தொலைந்த தங்க செயின் எப்படி கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை இழந்த நிலையில், அங்கு துப்புரவு பணியை மேற்கொண்ட மாஜ்மா என்ற பெண்ணின் கண்களில் அந்த செயின் தென்பட்டது. பொன்னைக்கண்டு மயங்காத அந்த பெண், நேர்மையுடன் மருத்துவமனை நிர்வாகத்திடம் அந்த தங்க செயினை ஒப்படைத்துள்ளார்.   உலக மகளிர் தின நாளில், இந்த துப்புரவு பெண் தொழிலாளியின்  நேர்மையான செயலை மருத்துவமனை நிர்வாகம் மட்டுமல்ல, அங்கு வந்த எல்லோரும் பாராட்டுக்களை தெரிவித்து கொண்டனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?