மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை திணிப்பது ஃபாசிச அணுகுமுறை... தவெக தலைவர் விஜய் காட்டம்!
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால், மாநிலத்திற்கு கல்வி நிதி வழங்க முடியாது என் பேசியது தமிழகம் முழுவதும் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் சட்ட விதிகள் தடையாக உள்ளன. தமிழ்நாடு அரசின் அரசியல் காரணங்களால் தான் இந்த கொள்கையை எதிர்க்கிறது எனவும் பேசியிருந்தார்.
மாநில மொழிக் கொள்கைக்குச் சவால் விடுத்து, தமிழகத்திற்கு நிதி ஒதுக்கமாட்டோம் என பகிரங்கமாக அறிவிப்பதும், விகடன் இணையத்தளப் பக்கத்தை முடக்கியதும் ஜனநாயகத்திற்கு எதிரான, கண்டனத்திற்கு உரிய ஃபாசிச அணுகுமுறையே. ஃபாசிச அணுகுமுறைகளை எந்த வடிவத்தில் யார் கையிலெடுத்தாலும் அது மத்திய அரசாக இருந்தாலும், மாநில அரசாக இருந்தாலும் மக்கள் பக்கம் நின்று தமிழக வெற்றிக் கழகம் எந்நாளும் தீர்க்கமாக எதிர்க்கும்” எனவும் காட்டத்துடன் பதிவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!