தவெக செயல் வீரர்கள் கூட்டம் … விஜய் இன்று முக்கிய ஆலோசனை!

 

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்கி விட்டார். தி.மு.க.வும் தங்கள் திட்டங்கள் வெற்றி தரும் என்ற நம்பிக்கையில் களமிறங்கியுள்ளது.

இந்த நிலையில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் விஜய் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். கவர்ச்சியான வாக்குறுதிகள் இல்லை என்றும், நடைமுறையில் சாத்தியமான திட்டங்களையே செயல்படுத்துவோம் என்றும் அவர் கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

இதனிடையே இன்று மாமல்லபுரத்தில் த.வெ.க. செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு தேர்தல் பணிகள் குறித்து பேச உள்ளார். சுமார் 3 ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில் கூட்டணி தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!