undefined

 பிறந்தநாள் கொண்டாட்டம் சர்ச்சை… தவெக நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் கடும் எச்சரிக்கை!

 
 

வந்தவாசி கிழக்கு பகுதியில் தவெக மாவட்ட செயலாளர் உதயகுமார் பிறந்தநாள் கொண்டாட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தொண்டர்கள் 3 கிலோமீட்டர் தூரம் சாலையில் ஊர்வலமாக சென்று கொண்டாடினர். நெரிசல் அதிகமான பகுதியில் கிரேன் மூலம் உயரத்தில் ஏற்றி மாலை அணிவித்தனர். இதனால் சாலை போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

இந்த நிகழ்வால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். வாகன ஓட்டிகள், பள்ளி மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்டோர் நீண்ட நேரம் சாலையில் சிக்கினர். தகவல் அறிந்து வந்த போலீசார் போக்குவரத்தை சீரமைக்க முயன்றபோது தொண்டர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வீடியோவாக பரவி விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுத்துள்ளார். கட்சி நிர்வாகிகள் பிறந்தநாள் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் நடத்த வேண்டும் என அறிவுறுத்தினார். விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த சம்பவம் கட்சியின் ஒழுங்கு மற்றும் பொது மக்களின் நலன் குறித்து புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!