தவெக விழாவில் விஜய் திடீர் நடனம்… தொண்டர்கள் உற்சாகம்!
தமிழக வெற்றிக் கழகத்தின் 3ஆம் ஆண்டு தொடக்க விழா உற்சாகமாக நடைபெற்றது. கட்சி தலைவர் நடிகர் விஜய், விழாவில் எதிர்பாராத வகையில் மேடையில் நடனமாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்த காட்சி விழாவுக்கு வந்திருந்த நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
விழாவில் பாடகர் வேல்முருகன் விஜய்யை வாழ்த்தி பாடல் பாடினார். அந்தப் பாடலின் போது விஜய் மேடையில் எழுந்து, அவருடன் இணைந்து நடனமாடினார். இந்த திடீர் நடனம் தொண்டர்களுக்கு மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் அளித்தது.
கட்சியின் 3ஆம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் ஆடியது, தலைமைக்கும் தொண்டர்களுக்கும் உள்ள நெருக்கத்தை வெளிப்படுத்தியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தவெகவுக்கு இந்த நிகழ்வு புதிய வேகத்தை கொடுத்துள்ளதாக தொண்டர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!