டிசம்பர் 9ம் தேதி தவெக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி... ரசிகர்கள் உற்சாகம்!
புதுச்சேரி அரசின் அனுமதி கிடைத்துள்ளதால், வரும் டிசம்பர் 9ஆம் தேதி நடிகர் விஜய் பங்கேற்கும் ‘தமிழக வெற்றிக் கழக’ பொதுக்கூட்டம் திட்டமிட்டபடி நடைபெற உள்ளது. முதலில் சாலைப் பேரணிக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில், பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும் என அரசு கூறியிருந்தது. அதன் அடிப்படையில் தவெக பொதுச்செயலாளர் (புஸ்ஸி) ஆனந்த், உப்பளம் துறைமுக மைதானத்தில் பொதுக்கூட்டம் நடத்த விண்ணப்பம் அளித்திருந்தார்.
உப்பளம் மைதானத்தை காவல்துறை மற்றும் தவெக நிர்வாகிகள் இணைந்து ஆய்வு செய்ததும், பாதுகாப்பு மற்றும் மேடைகட்டும் ஏற்பாடுகள் குறித்து விரிவாக பேசப்பட்டதும், இறுதியாக அனுமதி வழங்கும் முடிவுக்கு வழி வகுத்தது. பின்னர், முதல்வர் என். ரங்கசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்த ஆனந்த், பொதுக்கூட்ட அனுமதி கடிதத்தை நேரில் பெற்றார்.
இதனால், புதுச்சேரியில் நடக்க இருக்கும் தவெக பொதுக்கூட்டம் முழு அரசாங்க அனுமதியுடன் நடைபெற உள்ளது. விஜய் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சி, புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரத்தில் அரசியல் வெப்பத்தை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!