40 ஆண்டுகாலப் பிரிவு... மீண்டும் இணைந்த காதல் ஜோடி!
அமெரிக்காவில் 40 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு, பிரிந்த ஒரு காதல் ஜோடி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ள நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கெவின் மற்றும் டெபி என்ற இந்த ஜோடியின் கதை, ஒரு சினிமா படத்தையே மிஞ்சும் வகையில் திருப்பங்கள் நிறைந்து காணப்படுகிறது. தங்கள் டீனேஜ் வயதில் ஒருவரையொருவர் உயிருக்குயிராகக் காதலித்த இவர்களின் வாழ்க்கை, ஒரு எதிர்பாராத சூழலால் தலைகீழாக மாறியது.
பள்ளிப் பருவத்தில் காதலித்துக் கொண்டிருந்த போது டெபி எதிர்பாராதவிதமாக கர்ப்பமானார். ஆனால், அப்போதைய வாழ்க்கைச் சூழல் மற்றும் குடும்பச் சூழ்நிலை காரணமாக, இருவரும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தனித்தனியாகத் தொடர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. டெபிக்குப் பிறந்த பெண் குழந்தையான 'வால்', ஒரு தத்து எடுக்கும் அமைப்பின் மூலம் வேறொரு குடும்பத்திற்குத் தத்துக் கொடுக்கப்பட்டார். காலப்போக்கில் கெவினும் டெபியும் ஒருவரை ஒருவர் தொடர்புகொள்ள முடியாமல் வெவ்வேறு திசைகளில் பிரிந்து சென்றனர்.
வாழ்க்கை இவர்களைத் தனித்தனித் தீவுகளாகப் பிரித்தாலும், டெபியின் மற்ற குழந்தைகளுக்குத் தங்களது தாயின் கடந்த காலக் காதல் மற்றும் தத்துக்கொடுக்கப்பட்ட சகோதரி பற்றித் தெரியவந்தது. அவர்கள் மேற்கொண்ட விடாமுயற்சியின் பலனாக, 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு டிஎன்ஏ (DNA) பரிசோதனை மூலம் தத்துக்கொடுக்கப்பட்ட 'வால்' எங்கிருக்கிறார் என்பது கண்டறியப்பட்டது. மகளைக் கண்டுபிடித்த கையோடு, டெபியின் பிள்ளைகள் அவரது பழைய காதலரான கெவினையும் தேடிக் கண்டுபிடித்தனர்.
தற்போது 40 வருட நீண்ட பிரிவுக்குப் பிறகு கெவின், டெபி மற்றும் அவர்களது மகள் வால் ஆகிய மூவரும் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். இத்தனை காலமும் ஒருவருக்காக ஒருவர் காத்திருந்தது போன்ற உணர்வுடன், கெவினும் டெபியும் இப்போது மீண்டும் தங்கள் காதலைப் புதுப்பித்துக் கொண்டுள்ளனர். பிரிந்த தந்தை, தாய் மற்றும் மகள் என மூவரும் இப்போது ஒரே குடும்பமாக இணைந்து வாழ்ந்து வருவது, "உண்மையான அன்பு என்றும் தோற்பதில்லை" என்பதை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!