undefined

கடற்கரைக்குச் சென்றபோது விபத்து... பொறியியல் கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு!

 

பொங்கல் விடுமுறை தினத்தைக் கொண்டாட நண்பர்களுடன் கடற்கரைக்குச் சென்ற மாணவர்கள், விபத்தில் சிக்கி உயிரிழந்தது அவர்களது குடும்பத்தினரிடையே மீளாத் துயரத்தை உண்டாக்கியுள்ளது.

காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு பகுதியைச் சேர்ந்த அர்ஜூன்ராம் (20) மற்றும் அவரது நண்பர் தர்மராஜ் (21). இவர்கள் இருவருமே நெடுங்காட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தனர்.

கடந்த வியாழக்கிழமை மாலை இருவரும் ஒரு இருசக்கர வாகனத்தில் காரைக்கால் கடற்கரையை நோக்கிச் சென்றுள்ளனர். வ.உ.சி புறவழிச்சாலையில் சென்றபோது, தர்மராஜ் வாகனத்தை வேகமாக ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

திடீரென பிரேக் பிடித்தபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சரிந்தது. இருவரும் சாலையில் விழுந்து சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டு, முன்னால் சென்ற ஆட்டோ ஒன்றின் மீது பலமாக மோதினர். இதில் இருவருக்கும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்குச் சிகிச்சை பலனின்றி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!