25 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி... பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ரஷியா!
உக்ரைன் போரைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் விதித்துள்ள மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளால், ரஷியா தற்போது 25 ஆண்டுகளில் இல்லாத பெரும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மாஸ்கோ டைம்ஸ் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவலின்படி, சர்வதேச நாடுகளுடனான மோதல் போக்கினால் ரஷியாவின் வருமானம் பாதியாகக் குறைந்துள்ளதாகத் தெரிகிறது. பணவீக்கம் மற்றும் ஏற்றுமதி முடக்கத்தால் திணறி வரும் அந்நாட்டு அரசு, தனது கஜானாவை நிரப்ப வேறு வழியின்றி கையிருப்பில் உள்ள தங்கத்தை அதிரடியாக விற்பனை செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச வங்கிப் பரிமாற்ற அமைப்பான 'ஸ்விஃப்ட்' தளத்திலிருந்து ரஷியா நீக்கப்பட்டதால், அந்நாட்டின் வர்த்தகக் கட்டமைப்பு முற்றிலும் சிதைந்து போயுள்ளது. அரசின் செலவுகளைச் சமாளிக்கத் தங்கத்தை விற்றுப் பணமாக்கும் நிலைக்கு அதிபர் புதின் தள்ளப்பட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ரஷியாவின் ரூபிள் நாணய மதிப்பு சரிந்துள்ளதால், அந்நாட்டு மக்கள் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். போர்ச் செலவுகள் ஒருபுறம் கழுத்தை நெரிக்க, மறுபுறம் பொருளாதாரத் தடைகள் அந்நாட்டின் முதுகெலும்பை உடைத்து வருவதாகப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மேற்கத்திய நாடுகளின் இந்தத் தொடர் முடக்கங்கள் ரஷியாவின் நீண்டகாலப் பொருளாதார வளர்ச்சியை 20 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. தற்காலிகமாகத் தங்கத்தை விற்றுச் சமாளித்தாலும், போர் நீடித்தால் ரஷியா மீள முடியாத பொருளாதாரப் படுகுழியில் விழும் அபாயம் உள்ளதாக 'மாஸ்கோ டைம்ஸ்' செய்தி விரிவாக விவரித்துள்ளது. வல்லரசு நாடான ரஷியாவுக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சோதனையானது, உலக நாடுகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!