undefined

இன்று முதல் 11 நாட்களுக்குப் புத்தக திருவிழா… அறிவுப் பசிக்கு விருந்து!

 

இன்று முதல் வரும் டிசம்பர் 29ம் தேதி வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெறுகிறது. இந்த புத்தக திருவிழா டிசம்பர் 19 முதல் 29 வரை 11 நாட்கள் நடத்தப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கங்கள் இணைந்து இதை நடத்துகின்றன.

View this post on Instagram

A post shared by KanchiAppatakkars (@kanchiappatakkars)

புத்தக திருவிழா தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். தென்னிந்தியா முழுவதும் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. 1000-க்கும் அதிகமான எழுத்தாளர்களின் படைப்புகள் இடம்பெறுவதுடன், இலட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. மாணவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் இது அறிவு விருந்தாக அமையும்.

மேலும் தினந்தோறும் சிறப்பு அழைப்பாளர்களின் உரைகள், சிந்தனைத் தூண்டும் பேச்சுகள் நடைபெறுகின்றன. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள், கலை மற்றும் நாட்டுப்புற நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. புத்தக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயனடைய மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!