undefined

டயர் வெடித்து கொளுந்துவிட்டு எரிந்த சொகுசு பேருந்து…  3 பேர் பலி!

 

 

ஆந்திர மாநிலம் நந்தியால் மாவட்டத்தில் இன்று அதிகாலை பேருந்தும் லாரியும் மோதியதில் பெரும் சோகம் ஏற்பட்டது. நெல்லூரிலிருந்து ஹைதராபாத் நோக்கி 36 பயணிகளுடன் சென்ற வோல்வோ பேருந்தின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்திசையில் வந்த கொள்கலன் லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.

மோதிய உடனே பேருந்தில் தீப்பிடித்து சில நிமிடங்களில் முழுவதுமாக எரிந்தது. இந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர், லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தீயைக் கண்ட பாதசாரி ஒருவர் ஜன்னல்களை உடைத்து பயணிகளை வெளியேற்ற உதவியதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

 

இருப்பினும் ஜன்னல் வழியாக குதித்த 12-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் நந்தியால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். விபத்துக்கான முழு காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!