undefined

30 அடி பள்ளத்தில் பாய்ந்த பேருந்து!! 7 பேர் பலி!! 30 பேர் படுகாயம்!!

 

ஆந்திரா மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் இருந்து    காக்கிநாடாவில் நடைபெறும் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக  ஆந்திர அரசு போக்குவரத்து கழக வாடகை பேருந்தில்   புறப்பட்டுச் சென்றுள்ளனர்.மொத்தம் 45 பயணிகளுடன் சென்ற இந்த சொகுசுப் பேருந்து தர்சி என்ற  இடத்திற்கு அருகே சென்று   கொண்டிருந்தது. அப்போது பேருந்தின் ஓட்டுநர் கண் அயர்ந்து விட்டார்.  இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத் தடுப்பை உடைத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள நாகர்சாகர் கால்வாயில் 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விட்டது.  

இந்தக் கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  30க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 5 பெண்கள், ஒரு குழந்தை மற்றும் ஒரு முதியவர் ஆவர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில்  60வயது அப்துல் ஹானி, 65 வயது  முல்லா ஜானி பேகம்,  58 வயது  முல்லா நூர்ஜஹான் ,  48 வயது ஷேக் ரமீஸ், 35 வயது  ஷேக் ஷபீனா ,  ஷேக் ஹினா ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். திருமணத்திற்கு சென்றவர்கள் பலியான சம்பவம் ஆந்திரா மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்