தறிகெட்டு ஓடிய கார்.. லாரி மீது மோதி கோர விபத்து; 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
குஜராத்தின் வல்சாட் மாவட்டத்தில் நேற்று மாலை இந்த கொடூர விபத்து நிகழ்ந்துள்ளது. குஜராத் மாநிலம், வல்சாட் மாவட்டம், உம்பர்கான் தாலுகாவிற்கு உட்பட்ட கும்பகாட் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு கார் அதிக வேகத்தில் வந்துள்ளது. அப்போது சாலையோரம் பழுதடைந்து நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் கார் எதிர்பாராத விதமாகப் பயங்கர வேகத்தில் மோதியது. மோதிய வேகத்தில் கார் அப்படியே லாரியின் அடியில் சிக்கி நசுங்கியது. இதில் காரில் பயணம் செய்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
விபத்து நடந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் வந்து, காரின் பாகங்களை வெட்டி எடுத்துச் சடலங்களை மீட்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பலியானவர்கள் அனைவரும் 20 முதல் 25 வயதுடைய இளைஞர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் அனைவரும் நவ்சாரி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், ஒரு சுற்றுலாப் பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பும்போது இந்த விபத்து நேரிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்து குறித்து வல்சாட் மாவட்ட எஸ்பி கூறுகையில், "லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தபோது, கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளார். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவர்களின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.
சாலையோரங்களில் லாரிகள் நிறுத்தப்படும்போது போதுமான எச்சரிக்கை விளக்குகள் அல்லது குறீயீடுகள் இல்லாததே இது போன்ற விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக இருப்பதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!