undefined

இன்று சென்னை சங்கமம் ஆரம்பம்.. 20 இடங்களில் கலை விருந்து... எங்கே.. என்ன நடக்கும்? முழு விவரம்!

 

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழர்களின் பாரம்பரியக் கலைகளைப் பறைசாற்றும் 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' ஐந்தாவது ஆண்டாக இன்று மாலை தொடங்குகிறது.

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் பிரம்மாண்ட விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலை நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைக்கிறார். தொடக்க விழாவில் மட்டும் 250-க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்கள் ஒன்றிணைந்து வழங்கவுள்ள கலை நிகழ்ச்சி, பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்த உள்ளது.

நாளை முதல் (ஜன. 15) நான்கு நாட்களுக்குச் சென்னையின் 20 முக்கிய இடங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.  பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை, மெரினா கடற்கரை, வள்ளுவர் கோட்டம், செம்மொழி பூங்கா, ராயபுரம் ராபின்சன் பூங்கா, எழும்பூர் அரசு அருங்காட்சியகம், தி.நகர் நடேசன் பூங்கா, ஆர்.ஏ.புரம் அரசு இசைக் கல்லூரி வளாகம், கிண்டி கத்திபாரா சந்திப்பு, அண்ணாநகர் டவர் பூங்கா, கோயம்பேடு ஜெய் நகர் பூங்கா, அசோக் நகர் மாநகராட்சி மைதானம், வளசரவாக்கம் லேமேக் பள்ளி வளாகம், ஜாபர்கான்பேட்டை மாநகராட்சி மைதானம், கொளத்தூர் மாநகராட்சி மைதானம், ஆவடி படைத்துறை உடைத் தொழிற்சாலை வளாகம், பல்லாவரம் கன்டோன்மெண்ட் பூங்கா, தாம்பரம் வள்ளுவர் குருகுலம் பள்ளி மைதானம், எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், சிலம்பாட்டம் என 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைகள் இங்கு அரங்கேற உள்ளன. தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 1,500 கலைஞர்கள் இதில் பங்கேற்கின்றனர். மேலும், இந்த ஆண்டு முதல்முறையாக கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கலைஞர்கள் பங்குபெறும் ஆடை அலங்கார அணிவகுப்பும் நடைபெறவுள்ளது.

கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு வகைகளான கொங்கு நாடு, செட்டிநாடு, நஞ்சில் நாடு மற்றும் டெல்டா பகுதி உணவுகளுக்கான பிரத்யேக ஸ்டால்களும் அமைக்கப்பட்டுள்ளன. இசைக்குச் செவிமடுத்துக் கொண்டே நாவிற்குச் சுவையான கிராமத்து உணவுகளையும் மக்கள் ருசிக்கலாம்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!