எவரெஸ்ட் சிகரம் தொட்ட சாதனை தமிழர்!! முதல்வர்  பெருமித ட்வீட்!!

 

தமிழகத்தை சேர்ந்த  இளைஞர் ராஜசேகர் பச்சை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளார். இவருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்ட பதிவில் நம் இளைஞர்கள் முத்திரை பதித்து நம்மையும் தமிழ்நாட்டையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் சென்னையை ஒட்டியுள்ள கோவளம் பகுதியில் வசித்து வருபவர் ராஜசேகர். இவருக்கு வயது 27. இவர் உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைந்துள்ளார். ராஜசேகர்  அலை சறுக்கு போட்டிகளில் சர்வதேச அளவில் பல வெற்றிகளைக் குவித்தவர் .

பிட்னெஸ், அலை சறுக்கு பயிற்சியாளராக இருந்தவருக்கு திடீரென மலையேற்றத்தில் சாதிக்க வேண்டும் என ஆர்வம் ஏற்பட்டது.  ஒரு வருட காலமாக அதற்கான பயிற்சிகள் எடுத்து, 6 மலை உச்சிகளில் ஏறி தன்னை எவரெஸ்ட் கனவுக்காக தயார் செய்து கொண்டார். 3 மாத உடற்பயிற்சி, பனி குளிரைத் தாங்க மணாலி, சோலங், நேபாள் பகுதிகளில் தங்கி உடலையும், மனதையும் உறுதிப்படுத்திக்கொண்டார். இவர்  ஏப்ரல் 13ம் தேதி எவரெஸ்ட் மலையின் அடிவாரத்தில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார்.  மே 19ம் தேதி வெள்ளிக்கிழமை  8850 மீட்டர் உயரத்தை அதிகாலை 5.30 மணிக்கு அடைந்தார்.  

ராஜசேகர்  எவரெஸ்ட் சிகரத்தை எட்டி சாதனை படைத்தார்.  உலக அரங்கிலும் தமிழகத்தின் பெருமையை நிலைபெறச் செய்துள்ளார். இந்நிலையில், சாதனைத் தமிழர் ராஜசேகருக்கு  முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "பல்வேறு விளையாட்டுகளிலும் நம் இளைஞர்கள் முத்திரை பதித்து நம்மையும் தமிழ்நாட்டையும் பெருமிதம் கொள்ளச் செய்கிறார்கள். அந்தவகையில் கோவளத்தைச் சேர்ந்த இராஜசேகர் பச்சை எனும் இளைஞர் உலகின் மிக உயரிய எவரெஸ்ட் சிகரத்தைத் தன் விடாமுயற்சியாலும் கடின உழைப்பாலும் ஏறி அடைந்து சாதனை படைத்துள்ளார்.  அவருக்கு எனது பாராட்டுகள்." எனத் தெரிவித்துள்ளார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!