undefined

தூத்துக்குடியைத் தொடர்ந்து மதுரை தவெக-வில் உச்சகட்ட மோதல்... 100 பெண்கள் முற்றுகை!

 

தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) உட்கட்சி மோதல்கள் மாநிலம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், மதுரையில் மாவட்டச் செயலாளருக்கு எதிராக அவதூறு பரப்புவதாகக் கூறி, பெண் தொண்டர் ஒருவருக்கு எதிராக நூற்றுக்கும் மேற்பட்ட மகளிரணியினர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

மதுரை மாநகர் விசாலாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற தவெக பெண் தொண்டர், நேற்று மதுரை மாநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் விஜயன்பன் கல்லணை மீது பல்வேறு அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். இது கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாவட்டச் செயலாளர் விஜயன்பன் கல்லணை மீது திட்டமிட்டு அவதூறு பரப்புவதாகச் சத்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மதுரையைச் சேர்ந்த தவெக மகளிரணியினர் திரண்டனர்.

இன்று மாலை சுமார் 100-க்கும் மேற்பட்ட மகளிரணியினர் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்குத் திரண்டு வந்தனர். சத்யா மற்றும் அவருக்குப் பின்னால் இருந்து இயக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் மனு அளித்தனர்.

கடந்த சில நாட்களாகவே தூத்துக்குடி, சென்னை, மதுரை எனப் பல்வேறு மாவட்டங்களில் தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. ஒருபுறம் பதவிக்காகத் தற்கொலை முயற்சி, மறுபுறம் மாவட்டச் செயலாளர்களுக்கு எதிரான புகார்கள் எனத் தவெக உட்கட்சி விவகாரங்கள் காவல் நிலையம் வரை சென்றிருப்பது அக்கட்சித் தலைமைக்குச் சவாலாக மாறியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!