கூட்டணி விவகாரம்.. டிச.15ல் அமித்ஷா சென்னை வருகிறார்!
அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க.வின் மூத்த தலைவருமான அமித்ஷா, வரும் டிசம்பர் 15ஆம் தேதி தமிழகம் வர இருக்கிறார். அவரது வருகை, கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ள தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அமித்ஷா, அங்கிருந்து வேலூருக்குப் பயணம் செய்ய இருக்கிறார். அங்கு நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்க உள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் தற்போது நான்குமுனைப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. உள்ளது. இருப்பினும், அ.தி.மு.க., பா.ம.க. மற்றும் தே.மு.தி.க. ஆகிய கட்சிகளைத் தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சூழலில், அமித்ஷாவின் வருகை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஆலோசனை: தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகளுடன் கூட்டணி விவகாரங்கள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து அமித்ஷா விரிவான ஆலோசனை நடத்த இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், நாளை (டிசம்பர் 13) டெல்லி சென்று அமித்ஷாவைச் சந்திக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அமித்ஷாவின் வருகை தமிழக அரசியல் களத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!