"தளபதிக்கு END-டே கிடையாது.. BEGINNING மட்டும் தான்!" - ஜனநாயகன் விழாவில் எச்.வினோத் அதிரடி!
கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலீல் (Bukit Jalil) ஸ்டேடியத்தில், சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் 'ஜனநாயகன்' படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் பேசிய இயக்குநர் எச்.வினோத், ரசிகர்கள் மத்தியில் நிலவிய பல சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு செல்வதால் இது அவரது கடைசிப் படம் என்று கூறப்படுவதை மறுத்துப் பேசிய எச்.வினோத்: "ஜனநாயகன் படத்தின் கடைசி 20 நிமிடங்களில் விஜய் சாருடைய 'ஃபேர்வெல்' (Farewell) வீடியோ இருப்பதாகவும், அது ரசிகர்களை அழவைக்கும் என்றும் சிலர் சொல்கிறார்கள். ஆனால் அப்படி எதுவும் இல்லை. படத்தின் முடிவில் ஒரு பெரிய நம்பிக்கை மட்டும்தான் இருக்கும். ஏனென்றால் தளபதிக்கு 'எண்ட்' (End) கிடையாது, இது வெறும் 'பிகினிங்' (Beginning) மட்டும்தான்!" என்று கூறி அரங்கத்தையே அதிர வைத்தார்.
'ஜனநாயகன்' திரைப்படம் ஒரு ரீமேக் படமா அல்லது தழுவலா என்ற குழப்பம் சமூக வலைதளங்களில் நீண்ட நாட்களாக நிலவி வந்தது. இது குறித்துப் பேசிய வினோத், "ஜனநாயகன் எப்படி இருக்கும் என்று நிறைய பேருக்குச் சந்தேகம் இருக்கிறது. ஒரு ரீமேக் படமாக இருக்குமா? இல்லை கொஞ்சம்தான் ரீமேக்கா? என்றெல்லாம் குழம்புகிறார்கள். ஒன்று மட்டும் சொல்கிறேன்... ஐயா இது தளபதி படம்! உங்கள் மனதில் இருக்கும் சந்தேகங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு வாருங்கள். இது 100 சதவீதம் பக்கா கமர்ஷியல் மற்றும் எண்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும்" என்று உறுதியளித்தார்.
மலேசிய வரலாற்றிலேயே ஒரு தமிழ் பட விழாவுக்கு 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது. அரசியல் மற்றும் சமூக மாற்றத்தை மையமாகக் கொண்ட ஆக்ஷன் படமாக 'ஜனநாயகன்' உருவாகியுள்ளது என்பதை வினோத்தின் பேச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!