உஷார்.... இப்படியெல்லாமா சாவு வரும்?! குளியலறையில் நிர்வாண கோலத்தில் இறந்து கிடந்த இளம் தம்பதியர்! 

 

வடஇந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ஹோலி பண்டிகை சில நாட்களுக்கு முன்பு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. வண்ணங்களின் திருவிழாவான ஹோலியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கொண்டாடித் தீர்த்தனர்.

இதனிடையே ஹோலி கொண்டாடித் திரும்பிய தம்பதி மர்மமான முறையில் வீட்டில் உயிரிழந்த கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை காட்கோபர் கிழக்குப் பகுதியிலுள்ள பந்த் நகரில் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீபக் ஷா, தீனா தம்பதி வசித்து வந்தனர். 

ஹோலி கொண்டாடிவிட்டு இரவில் வீடு திரும்பினார். காலையில் பணிப் பெண் வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறக்கவில்லை. வீட்டு வேலைக்காரப் பெண் வந்து பார்த்த போது கதவு பூட்டப்பட்டிருந்தது. உடனே அந்தப் பெண் தீனாவுக்கு போன் செய்து பார்த்தார். ஆனால், போன் எடுக்கப்படவில்லை. அதே சமயம் போன் சத்தம் வீட்டுக்குள்ளிருந்து வந்தது. உடனே சந்தேகமடைந்த வேலைக்காரப் பெண், தீபக்கின் தாயாருக்கு போன் செய்து தகவல் கொடுத்தார்.

தீபக்கின் தாயார் அதே கட்டடத்தில் வசிக்கும் தன்னுடைய உறவினருக்கு இது குறித்து தகவல் கொடுத்தார். உடனே அந்த உறவினர் தன்னிடமிருந்த மாற்றுச் சாவியை எடுத்து வந்து கதவைத் திறந்து வீட்டில் தேடினர். 

அப்போது பாத்ரூமில் கணவன், மனைவி இருவரும் நிர்வாணமான நிலையில் மயங்கி கிடந்தனர். உடனே குடும்ப டாக்டர் வரவழைக்கப்பட்டு, அவர்களைப் பரிசோதித்து பார்த்து போது, இருவரும் இறந்து விட்டது தெரிய வந்தது. இதையடுத்து இருவரின் உடல்களும் ராஜாவாடி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

ஆனால் என்ன காரணத்தால் இருவரும் இறந்தனர் என்பது குறித்து டாக்டர்கள் அறிக்கையில் குறிப்பிடவில்லை. உடல் மாதிரிகள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றன.

பாத்ரூமிலிருந்த தண்ணீரைச் சுடவைக்கப் பயன்படும் கைஸரிலிருந்து வெளியான வாயு காரணமாக இறந்தார்களா அல்லது இருவரும் வயாகரா அல்லது ஹோலி பண்டிகைக்காகத் தயாரிக்கப்படும் பாங் எனப்படும் ஒரு வகை பானம் குடித்ததால் இறந்தார்களா என்ற குழப்பம் இருந்து வருகிறது. போலீசார் இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் விசாரணையில், கைஸரில் இருந்து வெளியான வாயு காரணமாக இறந்திருக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!