undefined

 செல்லப்பிராணி உரிமம் பெறுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு... நாளை முதல் வீடு வீடாக ஆய்வு! 

 
 

 

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செல்லப்பிராணிகளை வளர்க்க உரிமம் பெறுவதற்கான காலக்கெடு இன்றுடன் (டிசம்பர் 14) முடிவடைகிறது. செல்லப்பிராணிகள் வளர்ப்பை முறைப்படுத்தும் நோக்கில், 2023 ஆகஸ்ட் மாதம் முதல் சென்னை மாநகராட்சி இணையதளம் வாயிலாக இந்த உரிமம் வழங்கும் நடைமுறை அமலில் உள்ளது. செல்லப்பிராணி உரிமையாளர்கள் எளிதாக உரிமம் பெற ஏதுவாக, அக்டோபர் 3ஆம் தேதி மேயரால் மேம்படுத்தப்பட்ட ஆன்லைன் போர்ட்டலும் தொடங்கப்பட்டது.

இந்த மேம்படுத்தப்பட்ட சேவை மூலம் நாய் மற்றும் பூனைகளுக்கான உரிமம் பெறுவது வேகமெடுத்த நிலையில், தற்போது வரை 56,378 செல்லப்பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி ஏற்கனவே அறிவித்தபடி, உரிமம் பெறாமல் செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களுக்கு ரூ. 5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்ற எச்சரிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

இதன்படி, உரிமம் பெறுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடைவதால், நாளை (டிசம்பர் 15) முதல் மாநகராட்சி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்த உள்ளனர். அப்போது, செல்லப்பிராணிகளுக்கான உரிமம் இல்லாதவர்களின் மீது உடனடியாக அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே, உரிமையாளர்கள் அபராதத்தைத் தவிர்க்க இன்றுக்குள் தங்கள் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது அவசியமாகும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!