இந்தியாவையே  உலுக்கிய கல்லூரி மாணவி மரணம்!! தொடர்ந்து 3 மாதம் ராகிங் கொடுமை!!

 

ராகிங் கொடுமைகளுக்கு என்னதான் கடுமையான தண்டணை வழங்கப்பட்டாலும் ஆங்காங்கே அசம்பாவிதங்கள் தொடர்கதையாகித் தான் வருகின்றன. குறிப்பாக மருத்துவ கல்லூரிகளில் நடைபெறும் ராகிங்களுக்கு எல்லையே இல்லை என்ற அளவுக்கு மாணவர்கள் அத்து மீறி வருகின்றனர். கல்லூரி  நிர்வாகங்கள், மத்திய மாநில அரசுகள் தண்டணைகளை கடுமையாக்கியும், கட்டுப்பாடுகளை அதிகரித்தும் வருகின்றன. மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புக்கள் செயல்பாடுகள் தொடர்ந்து படிப்பிக்கப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும்  சில விபரீதங்களை கட்டுப்படுத்த முடிவதில்லை. தெலங்கானா மாநிலம் வராங்கல் மாவட்டத்தில் காக்கத்தீயா மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில், ப்ரீத்தி என்ற மாணவி முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு படித்து வந்தார். அதே மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் 2-ம் ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர் ஆசிப் என்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் ஆசிப் தன்னை ராகிங் செய்வதாக ப்ரீத்தி பெற்றோரிடம் பலமுறை புகார் கூறியிருக்கிறார். இது தொடர்பாக ப்ரீத்தியின் பெற்றோர் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். இரண்டு பேரையும் வரவழைத்து கவுன்சிலிங் செய்த கல்லூரி நிர்வாகம் பின்னர் இரண்டு பேரையும் அனுப்பி வைத்துவிட்டது.

மேலும் ப்ரீத்தி பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிப்பை காவல் நிலையத்திற்கு வரவழைத்த போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஆசிப், தான் ப்ரீத்தியை ராகிங் செய்யவில்லை. பணி தொடர்பாக அவரை சில விஷயங்களில் கண்டித்தேன் என்று கூறியிருக்கிறார். எனவே அவருக்கு கவுன்சிலிங் செய்த போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன் ப்ரீத்தி, அறுவை சிகிச்சையின் போது நோயாளிகளை மயக்கமடையச் செய்யும் அனஸ்தீசியாவை அதிகளவில் தன்னுடைய உடலில் ஊசி மூலம் செலுத்தி தற்கொலைக்கு முயன்றார். இதனைக் கவனித்த சக மாணவிகள் அவரை உடனடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் உயர் சிகிச்சைக்காக ஐதராபாத்தில் உள்ள நிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த வராங்கல் போலீசார் முதுநிலை மருத்துவ மாணவர் ஆசிப்பை பிடித்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். அப்போது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் மாணவியை ராகிங் செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். இதன் அடிப்படையில் அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவருடைய உடல் மீண்டும் மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பலரை வேன்களில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இது பற்றி அறிந்த அரசு அதிகாரிகள் ப்ரித்தீ குடும்ப உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ப்ரீத்தி மரணத்திற்கு இழப்பீடாக 30 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் உறுதிமொழி அளிக்கப்பட்டது. இது தவிர ப்ரீத்தி மரணம் பற்றி விசாரணை நடத்தப்படும் என்றும் அரசு சார்பில் உறுதிமொழி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ப்ரித்தீ குடும்பத்தினர் போராட்டத்தைக் கைவிட்டனர். எனவே ப்ரீத்தி உடல் உடற்கூராய்வுக்காக காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர்,  உடல் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?