undefined

"ஆசிரியர் கண்ணன் மரணத்திற்கு திமுக அரசுதான் பொறுப்பு!" - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்! ₹50 லட்சம் நிதி வழங்கக் கோரிக்கை!

 

பணி நிரந்தரம் கோரிப் போராடி வந்த பகுதிநேர ஆசிரியர் கண்ணன் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், தமிழக அரசின் மெத்தனப் போக்கே இதற்குக் காரணம் எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

அன்புமணி ராமதாஸின் அறிக்கையில், "பணி நிலைப்பு கோரிக்கையை வலியுறுத்திப் போராடிய ஆசிரியர் கண்ணன், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

"திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஐந்தாண்டுகள் நெருங்கும் நிலையிலும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. 13 ஆண்டுகளாகப் போராடி வரும் ஆசிரியர்களுக்கு உரியத் தீர்வு காண்பதற்குப் பதிலாக, அவர்களைக் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து வைப்பதும், அடக்குமுறைகளைக் கையாள்வதும்தான் மன உளைச்சலுக்குக் காரணம். ஆசிரியர் கண்ணனின் தற்கொலைக்கு திமுக அரசுதான் முழுப் பொறுப்பேற்க வேண்டும்."

உயிரிழந்த ஆசிரியர் கண்ணன் குடும்பத்திற்குத் தமிழக அரசு உடனடியாக ₹50 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும்.  இனியாவது மனசாட்சிக்கு அஞ்சி, போராடி வரும் அனைத்து பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றி அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!