அதிர்ச்சியில் திமுக... மு.க.அழகிரியின் முக்கிய ஆதரவாளர் மன்னன் அதிமுகவில் இணைப்பு?!
மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயரான பி.எம்.மன்னன், மு.க.அழகிரி திமுகவில் செல்வாக்கோடு இருந்த காலத்தில் மதுரையின் முக்கிய முகமாகத் திகழ்ந்தவர்.
கடந்த 2014-ம் ஆண்டு மு.க.அழகிரி திமுகவில் இருந்து நீக்கப்பட்ட போது, அவருக்கு ஆதரவாகச் செயல்பட்ட பி.எம்.மன்னன் உள்ளிட்ட நிர்வாகிகளும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். கடந்த 12 ஆண்டுகளாகச் சுமார் 3 முறை திமுக தலைமையிடம் பி.எம்.மன்னன் மன்னிப்புக் கடிதம் வழங்கியும், அவரை மீண்டும் கட்சியில் இணைக்கத் தலைமை பச்சைக்கொடி காட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
சமீபத்தில் கூட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்திருந்தபோது, அவரைச் சந்தித்து மீண்டும் திமுகவில் இணைய மன்னன் விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அதற்குப் போதிய பலன் கிடைக்கவில்லை.
தனது அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாவதைத் தடுக்கவும், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மீண்டும் தீவிர அரசியலுக்கு வரவும் பி.எம்.மன்னன் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இன்று சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) முன்னிலையில் அவர் அதிமுகவில் இணைய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் அழகிரியின் மேலும் சில தீவிர ஆதரவாளர்களும் அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் பகுதிகளில் அழகிரி ஆதரவாளர்களின் வாக்கு வங்கி இன்றும் கணிசமாக உள்ளது. பி.எம்.மன்னன் அதிமுகவிற்குச் செல்வது, வரும் தேர்தலில் மதுரை மண்டலத்தில் அதிமுகவின் பலத்தை அதிகரிக்கக்கூடும். இது மு.க.அழகிரிக்கு தனிப்பட்ட முறையில் ஒரு அதிர்ச்சியாகவும், திமுகவிற்கு மதுரையில் ஒரு சவாலாகவும் பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!