undefined

13க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிரடிச் சோதனை... ரூ.20 கோடி சொத்துக்கள் பறிமுதல்!

 

அமெரிக்காவிற்குச் சட்டவிரோதமான முறையில் இந்தியர்களை அனுப்பி வைத்த 'டங்கி' (Dunki) வழித்தட மோசடி தொடர்பாக, டெல்லி, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் அமலாக்கத்துறை (ED) இன்று அதிரடிச் சோதனைகளை மேற்கொண்டது. இந்தச் சோதனையின் முடிவில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கானது கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவிலிருந்து ராணுவ விமானம் மூலம் 330 இந்தியர்கள் சட்டவிரோதக் குடியேற்றத்திற்காகத் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் தொடங்கப்பட்டது. இது தொடர்பாகப் பஞ்சாப் மற்றும் ஹரியானா போலீசார் பதிவு செய்த 17-க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை (FIR) அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறை பண மோசடி விசாரணையைத் தீவிரப்படுத்தியது. இன்று டெல்லி மற்றும் ஜலந்தர் உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 4.68 கோடி ரூபாய் ரொக்கம், 313 கிலோ வெள்ளி மற்றும் 6 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த மோசடி கும்பல், அமெரிக்காவிற்குச் செல்ல விரும்பும் அப்பாவி மக்களிடம் தலா 45 முதல் 50 லட்சம் ரூபாய் வரை வசூலிப்பதாகத் தெரிகிறது. பணத்தைப் பெற்றுக்கொண்டு, அவர்களை மெக்சிகோ போன்ற ஆபத்தான வழித்தடங்கள் வழியாகச் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைக்க முயன்றுள்ளனர். குறிப்பாக, ஹரியானாவைச் சேர்ந்த ஒரு முக்கிய ஏஜென்ட், வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலிப்பதற்கு உத்தரவாதமாக அவர்களின் நிலம் மற்றும் வீட்டின் அசல் ஆவணங்களை அடமானமாகப் பெற்றுக்கொண்டது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிடிபட்ட ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் சான்றுகளின் அடிப்படையில் இந்தச் சர்வதேச மனிதக் கடத்தல் கும்பலில் தொடர்புடைய மற்ற நபர்களிடமும் விசாரணை தொடர்ந்து வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!