போராளியின் சண்டை... முழு தேசமும் உங்களுடன் உள்ளது... நடிகர் ரஜினிகாந்த்!
May 7, 2025, 10:45 IST
இந்தியா பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அதிகாலை ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதேபோல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்ட இந்திய ராணுவத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பதிவில், போராளியின் சண்டை தொடங்குகிறது. பணி நிறைவேறும் வரை நிறுத்த வேண்டாம்! பிரதமர் மோடி அவர்களே, முழு தேசமும் உங்களுடன் உள்ளது என பதிவிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!