சுவாச நோயை குணப்படுத்த ஒன்றரை வயது குழந்தைக்கு சூடு வைத்த குடும்பம்.. சிகிச்சை பலனின்றி பலியான சோகம்..!!

 

ஒன்றரை வயது குழந்தைக்கு காசநோய் ஏற்பட்டதால் குடும்பத்தார் சூடு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

மத்திய பிரதேச மாநிலம் ஷாஹோல் மாவட்டத்தில் உள்ளது பந்த்வா கிராமம். இக்கிராமத்தில் உள்ள தம்பதியருக்கு பிறந்த ஒன்றரை வயது குழந்தைக்கு சுவாச நோய் உள்ளது. இதனைக் குணப்படுத்த இரும்புக் கம்பியால் சூடுபடுத்தினால் போதும் என்ற மூட நம்பிக்கையில் தம்பதியர் குழந்தைக்கு சூடு வைத்துள்ளனர்.

இதில் குழந்தைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் கடந்த டிச., 21ம் தேதி, அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனை வந்த காவல்துறையினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் முதற்கட்ட விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மார்கழி மாத குளிர்... சளி, இருமலை விரட்ட இதைச் செய்தாலே போதும்!

மார்கழிக் கோலத்தில் மட்டும் பூசணிப்பூ வைப்பது ஏன்?!

மார்கழி மாதத்தில் இந்த தவற மட்டும் செய்யாதீங்க!

மார்கழி குளிர்ல தயிர் சாப்பிடலாமா... மருத்துவம் என்ன சொல்கிறது?!

மார்கழி மாதம் ஏன் திருமணம் செய்யக்கூடாது... பிரமிக்க வைக்கும் விஞ்ஞான உண்மைகள்!