பிரபல நடிகை 2 வது தடவையாக அம்மாவாகிறார்... குவியும் வாழ்த்துக்கள்!
பாலிவுட் நடிகை சோனம் கபூர் இரண்டாவது முறையாக தாயாகப் போகிறார். இதை உறுதிப்படுத்தும் வகையில் அவர் சமூக வலைதளங்களில் புதிய பதிவொன்றை பகிர்ந்து ரசிகர்களுக்கு தகவல் அளித்துள்ளார். சோனம், தொழிலதிபர் ஆனந்த் அஹுஜாவை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் 2022 ஆம் ஆண்டு பிறந்த வாயு எனும் மகன் உள்ளார்.
2007 ஆம் ஆண்டு ‘சாவரியா’ படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் அறிமுகமான சோனம் கபூர், பிரேம் ரத்தன் தன் பாயோ, நீர்ஜா, சஞ்சு உள்ளிட்ட பல படங்களில் நடித்துத் தனக்கென இடம் பிடித்தார். தமிழில் தனுஷுடன் இணைந்து நடித்த ராஞ்சனாவும் அவரது முக்கியப்படங்களில் ஒன்றாகும். அவரின் இயல்பான நடிப்பு பலரின் பாராட்டையும் பெற்றது.
தற்போது திரைப்படங்களில் இருந்து ஓரளவு விலகி இருப்பதாகக் கூறப்படும் சோனம் கபூர், குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகிறார். இந்நிலையில் இரண்டாவது குழந்தை வரவுக்கான அறிவிப்பு ரசிகர்களிடையே வாழ்த்துகளைப் பெருகச் செய்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!