undefined

கேக் ஊட்டி மகிழ்ந்த தந்தை.. அடுத்த சில நிமிடங்களில் கட்டிலில் இருந்து விழுந்த 2 வயது குழந்தை பலி!

 

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே, கட்டிலில் இருந்து தவறி விழுந்த இரண்டரை வயது ஆண் குழந்தை யுகப்பிரியன் பரிதாபமாக உயிரிழந்தான். விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென உயிரிழந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூலித் தொழிலாளியான பிரகாஷ் - ரஞ்சிதா தம்பதியின் ஒரே மகன் யுகப்பிரியன். நேற்று இரவு ரஞ்சிதா வேலைக்குச் சென்றிருந்த நிலையில், தந்தை பிரகாஷ் குழந்தையுடன் வீட்டில் இருந்துள்ளார். இரவு அனைவரும் ஒன்றாக அமர்ந்து கேக் சாப்பிட்டு மகிழ்ந்துள்ளனர். அதன் பிறகு குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக உயர்வான கட்டிலில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்துள்ளது.

குழந்தை அழுததும், பிரகாஷ் அவனைச் சமாதானப்படுத்தித் தூங்க வைத்துள்ளார். ஆனால், காலையில் எழுந்து பார்த்தபோது குழந்தையின் வாயில் நுரை தள்ளி பேச்சு மூச்சில்லாமல் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனடியாகத் தனியார் மருத்துவமனைக்கும், பின்னர் மூலைக்கரைப்பட்டி அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்ட நிலையில், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது குழந்தையின் உடல் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் மரணத்தில் ஏதேனும் மர்மம் உள்ளதா அல்லது தலையில் ஏற்பட்ட உட்புறக் காயத்தால் (Internal Injury) மூளைப் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை மிகச் சிறிய வயது என்பதால், சுகாதாரத் துறையினரும் தனியாக ஒரு விசாரணையைத் தொடங்கியுள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே முழுமையான உண்மை தெரியவரும்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!