undefined

திரையுலகமே அதிர்ச்சி... இயக்குநர் பாரதிராஜா மகன் மாரடைப்பால் காலமானார்!

 

சென்னையில் இயக்குநர் பாரதிராஜா மகன் மாரைப்பால் காலமானார். இயக்குநர் பாரதிராஜா மகன் மாரைப்பால் காலமான செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  அவருக்கு வயது 48.

1999ல் தாஜ்மகால் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான மனோஜ், அதன் பின்னர் கடல் பூக்கள், சமுத்திரம், அல்லி அர்ஜூனா, விருமன், மாநாடு, ஈரநிலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார.

கடந்த 2023ல் பாரதிராஜா, சுசீந்திரன் மற்றும் புதுமுகங்களை வைத்து மார்கழி திங்கள் எனும் படத்தை இயக்கி உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்ட மனோஜ் பாரதி, தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்துள்ளார். 

அறுவை சிகிச்சைக்கு பின்னர் ஓய்வெடுத்து வந்த நிலையில் சேத்துபட்டு பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மனோஜ் நடிக்க வருவதற்கு முன்னர் இயக்குனர்மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது. 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?