இந்த வருடத்தின் முதல் ரூ.1,000 கோடி வசூல் படம்... சாதனைகளைத் தகர்க்கும் ரன்வீர் சிங்கின் 'துரந்தர்'!
நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில் டிசம்பர் 5, 2025 அன்று வெளியான 'துரந்தர்' திரைப்படம், திரையரங்குகளில் வெளியாகி வெறும் 21 நாட்களில் உலகளவில் ரூ.1,000 கோடி வசூலைத் தாண்டி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
இந்தத் திரைப்படம் 2025ம் ஆண்டில் ரூ.1,000 கோடி வசூல் செய்த முதல் இந்தியப் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இந்தியாவில் மட்டும் நிகர வசூலாக சுமார் ரூ.668 கோடி ஈட்டியுள்ளது. உலகளாவிய வசூல்: வெளிநாட்டுச் சந்தைகளையும் சேர்த்து மொத்தம் ரூ.1,006 கோடிக்கும் மேல் வசூலித்து, இந்த மைல்கல்லை எட்டிய 9-வது இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்' புகழ் ஆதித்யா தார் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ரன்வீர் சிங்குடன் சஞ்சய் தத், ஆர். மாதவன், அக்சய் கன்னா மற்றும் அர்ஜுன் ராம்பால் எனப் பெரிய நட்சத்திரக் கூட்டமே நடித்துள்ளது. தமிழில் 'தெய்வ திருமகள்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா அர்ஜுன், இதில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடித்துப் பெரிய அளவில் கவனம் ஈர்த்துள்ளார்.
படத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லை தாண்டிய உளவுத் துறை நடவடிக்கைகள் மற்றும் சில உணர்ச்சிகரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளதால். சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் (UAE), கத்தார், குவைத் உள்ளிட்ட ஆறு வளைகுடா நாடுகளில் இந்தப் படத்தை வெளியிடத் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், இத்தடை படத்திற்கான வசூலைப் பாதிக்கவில்லை என்பதையே இந்த ரூ.1,000 கோடி வசூல் காட்டுகிறது.
தற்போது பாக்ஸ் ஆபிஸில் இந்தப் படம் ஷாருக்கானின் 'பதான்' மற்றும் 'ஜவான்' படங்களின் வாழ்நாள் வசூலை நெருங்கி வருகிறது. இதே வேகம் தொடர்ந்தால், இந்தியத் திரையுலகின் டாப் 5 வசூல் படங்களில் ஒன்றாக 'துரந்தர்' இடம்பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!