தமிழகத்தில் பிப்ரவரி 23ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது!
தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அவர்கள் நேற்று வெளியிட்ட அறிவிப்பின்படி, வரும் பிப்ரவரி 23, 2026 அன்று தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது.
முதலில் இந்தப் பட்டியல் பிப்ரவரி 14-ம் தேதி வெளியாவதாக இருந்தது. இருப்பினும், வாக்காளர் பட்டியலில் இருந்த சில 'தர்க்கரீதியான முரண்பாடுகள்' மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, தகுதியான வாக்காளர்கள் யாரும் விடுபடக் கூடாது என்பதற்காகக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 30-ம் தேதி வரை பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
பெறப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் முரண்பாடுகள் குறித்த விசாரணைகள் பிப்ரவரி 10-ம் தேதியுடன் முடிவடைந்து, தற்போது தரவுகள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. பிப்ரவரி 23-ம் தேதி அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்கள்.
அந்தந்தப் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்கள். மேலும், voters.eci.gov.in என்ற இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் உங்கள் பெயரைக் காணலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை உறுதி செய்வது ஜனநாயகக் கடமையாகும். குறிப்பாக 18 வயது பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் மற்றும் முகவரி மாற்றம் செய்தவர்கள் இந்த இறுதிப் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா என்பதைச் சரிபார்ப்பது அவசியம். ஒருவேளை இந்தப் பட்டியலில் பெயர் இல்லையென்றால், தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்புகள் வழங்கப்படும்.
புதுச்சேரிக்கான இறுதி வாக்காளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. அதன்படி, அங்கு மொத்தம் 9.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கேரளா மற்றும் கோவா மாநிலங்களில் பிப்ரவரி 21-ம் தேதி இறுதிப் பட்டியல் வெளியாகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!