undefined

 ஜனவரி 20ம் தேதி சட்டசபை முதல் கூட்டம்… கவர்னர் உரை உறுதி!

 
 

ஒவ்வொரு ஆண்டும் தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில், 2026-ம் ஆண்டு முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 20-ந் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 9.30 மணிக்கு கூடும் கூட்டத்தில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரையாற்றுகிறார்.

இதுகுறித்து சபாநாயகர் அப்பாவு தலைமைச்செயலகத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார். கவர்னர் உரையைத் தொடர்ந்து, கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வு குழு முடிவு எடுக்கும் என்றார். அரசு செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும் எனவும் கூறினார்.

கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் ஜனவரி 21 முதல் 24 வரை 4 நாட்கள் நடைபெற உள்ளது. பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய சட்டசபை மீண்டும் கூடும். புதிய ஆண்டின் அரசியல் நகர்வுகளை இந்த கூட்டம் தீர்மானிக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!