undefined

ஜன.3ல் தச்சங்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி... முகூர்த்த கால் நடப்பட்டு பணிகள் தீவிரம்!

 

தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்குப் பெயர் பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தில், வரும் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கான ஆயத்தப் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன.

தமிழகத்திலேயே ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தொடங்கும் "தொடக்கப் புள்ளியாக" புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சி கருதப்படுகிறது. இங்குள்ள புனித விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு மற்றும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, 2026 ஜனவரி 3ம் தேதி போட்டியை நடத்த விழா குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அனுமதி விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், தச்சங்குறிச்சி கிராம மக்கள் ஜல்லிக்கட்டு மைதானத்தில் முகூர்த்த கால் நட்டனர். இதனுடன் மைதானத்தைச் சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் தொடங்கியுள்ளன. காளைகள் வெளியே வரும் வாடிவாசல் பகுதி வர்ணம் பூசப்பட்டு பலப்படுத்தப்பட்டு வருகிறது. பார்வையாளர்கள் மற்றும் வீரர்கள் பாதுகாப்பிற்காக இருபுறமும் பலமான மரக்கட்டைகள் மற்றும் இரும்பு பேரிகார்டுகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. காளைகளைப் பரிசோதிக்கும் இடம் மற்றும் வீரர்களுக்கான முதலுதவி மையங்கள் அமைப்பதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வீரர்கள் காயமடையாமல் இருக்க வாடிவாசல் முன்புறம் தேங்காய் நார் பரப்பும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு என்பதால், புதுக்கோட்டை மட்டுமின்றி திருச்சி, மதுரை, தஞ்சாவூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த காளை உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் தச்சங்குறிச்சிக்கு வரத் தயாராகி வருகின்றனர். தற்போது அங்குள்ள காளைகளுக்குப் பாய்ச்சல், நீச்சல் எனப் பல்வேறு பயிற்சிகள் தீவிரமாக அளிக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியவுடன், ஆன்லைன் மூலம் காளைகள் மற்றும் வீரர்களுக்கான பதிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!