undefined

WPL வரலாற்றில் முதல் 'ரிட்டயர்ட் அவுட்'... பாதியில் வெளியேற்றப்பட்ட சோனி - என்ன நடந்தது?

 

பெண்கள் பிரீமியர் லீக் (WPL) தொடரில் நேற்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், குஜராத் ஜெயன்ட்ஸ் வீராங்கனை ஆயுஷி சோனி (Ayushi Soni) ஒரு தேவையற்ற சாதனையைத் தன்வசம் ஆக்கியுள்ளார்.

ஒரு பேட்டர் காயம் காரணமாகப் போட்டியிலிருந்து வெளியேறினால் அது 'ரிட்டயர்ட் ஹர்ட்' (Retired Hurt). ஆனால், எந்தக் காயமும் இன்றி, அணியின் நலனுக்காக அல்லது ரன் வேகத்தை உயர்த்த ஓட்டுநரின் முடிவின்படி ஒரு பேட்டர் வெளியேறினால் அது 'ரிட்டயர்ட் அவுட்' எனப்படும். இவர் மீண்டும் பேட்டிங் செய்ய வர முடியாது.

குஜராத் ஜெயன்ட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தபோது, மிடில் ஆர்டரில் களமிறங்கிய ஆயுஷி சோனி ரன் குவிக்க மிகவும் திணறினார். அவர் 14 பந்துகளை எதிர்கொண்டு ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் வெறும் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஓவர்கள் வேகமாகக் கடந்த நிலையில், ரன் ரேட்டை உயர்த்த அதிரடி வீராங்கனைகளை களமிறக்க குஜராத் நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக ஆயுஷி சோனி 'ரிட்டயர்ட் அவுட்' முறைப்படி வெளியேற்றப்பட்டார். இதன் மூலம் WPL வரலாற்றில் இவ்வகையில் ஆட்டமிழந்த முதல் வீராங்கனை என்ற பெயரை அவர் பெற்றார்.

இறுதியில் குஜராத் 192 ரன்களைக் குவித்தாலும், மும்பை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரின் (57* ரன்கள்) அதிரடியால் அந்த இலக்கை மும்பை அணி எட்டிப்பிடித்து அபார வெற்றி பெற்றது. இது மும்பை அணி விரட்டிப் பிடித்த அதிகபட்ச இலக்கு என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!