undefined

நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது.. ஊரே திரண்டு கண்ணீர் அஞ்சலி!

 

நடிகர் மயில்சாமியில் இறுதி ஊர்வலம் தொடங்கியது. ஊரே திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. வழி நெடுக ரசிகர்களும், பொதுமக்களும் மாமனிதன் மயில்சாமிக்கு தங்கள் கன்ணீரால் அஞ்சலி செலுத்தினார்கள். 

நடிகர் மயில்சாமி, கேளம்பாக்கத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்றுள்ளார். சிவராத்திரி பூஜையில் ட்ரம்ஸ் சிவமணியுடன் இணைந்து கலந்துகொண்டார். கோயிலுக்கு சென்றுவிட்டு நேற்று அதிகாலை 3:30 மணிக்கு இல்லம் திரும்பியுள்ளார். அதன் பின்னர், பசி எடுத்ததால் இட்லி சாப்பிட்டுள்ளார். அதன் பிறகு தான் நெஞ்சு வலிக்கிறது என்று கூறியுள்ளார்.

குடும்பத்தினர் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மயில்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அதன்பிறகு அவரது உடல் சென்னை சாலிகிராமத்திலுள்ள இல்லத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

மயில்சாமியின் உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோர், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மயில்சாமியின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினர்.  பின்னர் மயில்சாமியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிலையில், மாரடைப்பால் உயிரிழந்த பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மயில்சாமி உடலுக்கு சிவ வாத்தியங்கள் முழங்க கலைஞர்கள் இறுதி மரியாதை செலுத்தினர்.

<a href=https://youtube.com/embed/fFRr5BhjyOA?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/fFRr5BhjyOA/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">  

சாலிகிராமம் வெங்கடேஸ்வரா நகரில் துவங்கிய ஊர்வலத்தில் நடிகர்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க பங்கேற்றுள்ளனர். வடபழனி மின்மயானத்தில் இறுதி ஊர்வலம் சென்றடைந்த பிறகு மயில்சாமி உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு தகனம் செய்யப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?