ஊஞ்சல் விளையாட்டில் விபரீதம்... கழுத்தில் சேலை இறுக்கி 6ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டை பகுதியில், வீட்டில் யாரும் இல்லாதபோது மரத்தில் சேலை கட்டி ஊஞ்சல் விளையாடிக் கொண்டிருந்த 6-ஆம் வகுப்பு மாணவன், எதிர்பாராத விதமாகச் சேலையில் கழுத்து இறுக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தான்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தேவி என்பவர், தனது 12 வயது மகன் அனில்குமாருடன் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டை பெரியார் தெருவில் வசித்து வந்தார். தேவி தனியார் தொழிற்சாலையில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். அனில்குமார் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 6-ஆம் வகுப்புப் படித்து வந்தான்.
வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அனில்குமார் சேலை மூலம் மரத்தில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தான். ஊஞ்சலில் அமர்ந்து சுழன்று விளையாடியபோது, சேலையில் எதிர்பாராத விதமாகக் கழுத்து இறுக்கி, அனில்குமார் கூச்சலிட்டபடி மயங்கினான்.
அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அனில்குமாரை மீட்டுச் சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குச் சிறுவனைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!