காதலன் கொலை… இறுதிச் சடங்கில் குங்குமம் பூசி ‘மணமகளாய்’ நின்ற காதலி!
மராட்டிய நந்தேட்டில் 20 வயது இளைஞர் சாக்ஷம் டேட் காதலுக்காக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. ஆஞ்சல் என்ற பெண்ணுடன் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த சாக்ஷம், அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று வருவதை குடும்பத்தினர் கவனித்ததும் உறவு வெளிச்சத்துக்கு வந்தது. இருவரும் வெவ்வேறு சாதி எனும் பிரிவால், குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்தாலும் இருவரும் பிரிவில்லா காதலில் நின்று, விரைவில் திருமணம் செய்ய முடிவு செய்ததாக தெரிகிறது.
இதையடுத்து ஆஞ்சலின் தந்தையும், சகோதரர்களும் திட்டமிட்டு வியாழக்கிழமை சாக்ஷமை தாக்கி தலையில் சுட்டுக் கொலை செய்துள்ளனர். அதோடு கல்லால் தலையை நசுக்கிய கொடூரம் கேட்கவே நடுங்க வைக்கிறது. காதலுக்காக உயிரை அர்ப்பணித்த சாக்ஷமின் உடல் ஊருக்கு வந்தபோது முழு பகுதியும் சோகத்தில் மூழ்கியது.
ஆனால் இறுதிச் சடங்கில் நடந்த சம்பவம் அனைவரையும் உலுக்கியது. கண்ணீர் மல்க நின்ற ஆஞ்சல், இறந்த காதலரின் நெற்றி மீது குங்குமம் வைத்து "இதே எனது திருமணம்… இனி நான் அவரது மனைவி" என அறிவித்தார். "என் காதல் இன்னும் உயிரோடு இருக்கிறது… தோற்றது என் குடும்பம்தான்" என கூறி அனைவரையும் உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார். கொலைக்குப் பொறுப்பான ஆறு பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்ட நிலையில், காதலின் பெயரில் நடந்த இந்த கொடூரம் இந்தியா முழுவதும் பரபரப்பாகியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!