கோல்டன் குளோப் விழா கோலாகலம்.. விருதுகளைக் குவித்த திரைப்படங்கள்!
உலக திரைப்பட ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே கோல்டன் குளோப் விருது நிகழ்ச்சி கோலாகலமாக நடந்து முடிந்தது. திரையுலகில் ஆஸ்கார் விருதுகளுக்கு இணையாகக் கருதப்படும் கோல்டன் குளோப் விருதுகளின் 83வது விழா அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நேற்று நடைபெற்றது.
சர்வதேச திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் சிறந்து விளங்கிய கலைஞர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. விழாவை பிரபல நகைச்சுவை நடிகர் நிக்கி கிளேசர் தொகுத்து வழங்கினார்.
மியூசிக்கல் - காமெடி பிரிவில், பால் தாமஸ் ஆண்டர்சன் இயக்கத்தில் லியோனார்டோ டி காப்ரியோ நடித்த ‘ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்’ திரைப்படம் முக்கிய விருதுகளை கைப்பற்றியது. 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட இந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குனர், சிறந்த துணை நடிகை உள்ளிட்ட 4 விருதுகளை வென்றது. ‘மார்ட்டி சுப்ரீம்’ படத்துக்காக திமோதி சாலமே சிறந்த நடிகராகவும், ‘இப் ஐ ஹேட் லெக்ஸ் ஐ வுட் கிக் யூ’ படத்துக்காக ரோஸ் பைர்ன் சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
டிராமா பிரிவில் ‘ஹாம்னெட்’ சிறந்த படமாக அறிவிக்கப்பட்டது. சிறந்த இசைக்கான விருதை லுட்விக் கோரன்சன் பெற்றார். சிறந்த சினிமா மற்றும் பாக்ஸ் ஆபிஸ் சாதனைக்கான விருதை ‘சின்னர்ஸ்’ படம் வென்றது. அனிமேஷன் பிரிவில் ‘கே-பாப் டீமான் ஹண்டர்ஸ்’ சிறந்த படமாகவும், ஆங்கிலம் அல்லாத மொழிப் பிரிவில் பிரேசிலிய திரைப்படமான ‘தி சீக்ரெட் ஏஜென்ட்’ விருதையும் தட்டிச் சென்றது. லிமிடெட் சீரிஸ் பிரிவில் ‘அடலசென்ஸ்’ தொடர் 4 முக்கிய விருதுகளை குவித்தது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!