மத்திய அரசின் ‘டெக்’ புரட்சி அமல்... 3ம் வகுப்பு மாணவர்களுக்கு ‘AI’ பாடங்கள்!
நாட்டின் கல்வி முறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கே செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) மற்றும் கணக்கீட்டுச் சிந்தனை (Computational Thinking) ஆகிய பாடங்களை அறிமுகப்படுத்த மத்திய கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய நடைமுறை 2026-27ஆம் கல்வியாண்டு முதல் அமலுக்கு வர உள்ளது.
மத்தியக் கல்வி அமைச்சகச் செயலாளர் சஞ்சய் குமார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. நம்மைச் சுற்றியுள்ள உலகில், AI என்பது இனி ஒரு கூடுதல் திறன் மட்டுமல்ல, அது ஒரு அடிப்படை கல்வித் திறன் (Basic Skill) ஆகும். தேசியக் கல்விக் கொள்கையின்படி, மாணவர்கள் எதிர்காலத்தில் வரும் தொழில்நுட்பங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் இளம் வயதிலேயே அவர்களைத் தயார்படுத்துவது அவசியமாகும்.
3ம் வகுப்பு மாணவர்களுக்குக் கடினமான கோடிங் சொல்லிக் கொடுக்கப்பட மாட்டாது. மாறாக, அவர்களின் அடிப்படைச் சிந்தனையை வளர்ப்பதே முக்கிய நோக்கம். சென்னை ஐஐடி (IIT Madras) பேராசிரியர் கார்த்திக் ராமன் தலைமையிலான நிபுணர்கள் குழு இதற்கான பாடத்திட்டத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. மாணவர்களுக்குத் தீவிர சிந்தனை (Critical Thinking), படைப்பாற்றல் (Creativity), சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது (Problem Solving) மற்றும் AI தொழில்நுட்பத்தை சரியான நெறிமுறைகளுடன் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்துக் கற்றுக் கொடுக்கப்படும்.
இந்தப் புதிய நடைமுறை வரும் 2026-27ஆம் கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்காகப் பிரத்யேகப் பாடப்புத்தகங்கள், வீடியோக்கள் மற்றும் செயல்முறை விளக்கங்களை என்சிஇஆர்டி (NCERT) மற்றும் சிபிஎஸ்இ (CBSE) இணைந்து தயாரிக்கும்.
மாணவர்களுக்குப் பாடம் எடுப்பதற்கு முன்பாக, ஆசிரியர்களுக்கு இது தொடர்பான சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இந்தத் திட்டம் முதற்கட்டமாக மத்திய பாடத்திட்டப் பள்ளிகளில் (CBSE) அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!